பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் கைது
பாவூர்சத்திரத்தில் ஆசிரியர் வீட்டில் நகை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம்- சுரண்டை ரோடு காந்திநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). இவர் கீழப்பாவூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது வீட்டில் கடந்த மாதம் 6-ந் தேதி புகுந்த மர்மநபர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 2½ பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டாா். இதுதொடர்பாக பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் சுரண்டை சிவகுருநாதபுரம் காமராஜர் தெருவை சேர்ந்த பாபு என்ற சொரூபன் (48) என்பவர் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சொரூபனை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.