சென்னிமலை அருகே ரோட்டோர புற்களில் தீ பிடித்தது

சென்னிமலை அருகே ரோட்டோர புற்களில் தீப்பிடித்து எரிந்தது.

Update: 2021-03-12 20:56 GMT
சென்னிமலை அருகே ரோட்டோர புற்களில் தீப்பிடித்து எரிந்தது. 
தீப்பிடித்தது
சென்னிமலை அருகே பெருந்துறை ஆர்.எஸ். செல்லும் வழியில் உள்ளது கோரக்காட்டுவலசு. இந்த பகுதியில் ரோட்டோரம் வறண்டு கிடந்த செடி, கொடிகள் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மளமளவென தீ பரவி அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வறண்டு கிடந்த புற்களிலும் பற்றியது.
தீயணைப்பு வாகனம் 
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அங்கு தீயணைப்பு வாகனம் செல்வதற்கு சரியான பாதை இல்லை. இதனால் செடி, கொடிகளை கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
யாரோ சிலர் பீடி, சிகரெட்டை புகைத்துவிட்டு அணைக்காமல் வீசியதே தீ விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்