சாத்தூர்,
சாத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுந்தரி முன்னிலையில் இந்த பேரணியை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போத்திராஜ், ரவி, ஆகியோர் தொடங்கி வைத்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள், மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆகியோர் யூனியன் ஆபீஸ் வளாகத்திலிருந்து படந்தால் சந்திப்பு முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.