முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
முதல் நாளில் 3 பேர் வேட்புமனு தாக்கல்
மதுரை
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மதுரையில் 3 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர். அவர்கள் மேலூர் தொகுதியில் கோபாலகிருஷ்ணன், மதுரை வடக்கு தொகுதியில் மணிகண்டன், திருமங்கலம் தொகுதியில் ராஜன்பாபு ஆகியோர் சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். இதனை தவிர மற்ற தொகுதிகளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. வருகிற 15-ந்தேதி, அ.தி.மு.க.- தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.