மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டியதில் 6 பேர் காயம்
மஞ்சு விரட்டில் மாடுகள் முட்டியதில் 6 பேர் காயம்
பொன்னமராவதி
பொன்னமராவதி ஒன்றியம் வார்பட்டு ஊராட்சியில் உள்ள சூலப்பிடாரி அம்மன் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முதலில் வார்ப்பட்டி கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்பு ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு ஊர்களிலிருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. துள்ளிக்குதித்து ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் பிடித்தனர். சில காளைகள் பிடிபடாமல் ஓடின. மஞ்சு விரட்டில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.