இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலம் போலி ஆவணம் மூலம் விற்பனை
இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலம் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோர்ட்டு உத்தரவின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை,
இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலம் போலி ஆவணம் மூலம் விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து கோர்ட்டு உத்தரவின் பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் காரைக்குடியை சேர்ந்த முத்துகண்ணன், நாட்டரசன்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன், அழகர், செங்குளிபட்டியை சேர்ந்த கதிரவன் ஆகிய 4 பேர் போலி ஆவணங்களை கொண்டு கடந்த 2-12-2014 அன்று காளையார்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேறு பெயருக்கு பதிவு செய்ததாக தெரிகிறது.
4 பேர் மீது வழக்கு
இது பற்றி அறிந்த திருநாவுக்கரசு சிவகங்கை நீதித்துறை நடுவர ்நீதிமன்றம் எண் 2-ல் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவின் பேரில் சிவகங்கை மாவட்ட குற்றபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டேஸ்வரன் 4 பேர் மீது வழக்குப்்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.