கல்லூரிகளில் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கல்லூரிகளில் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-03-12 20:08 GMT
விருதுநகர், 
கல்லூரிகளில் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் கண்ணன் கலந்து கொண்டார். 
விழிப்புணர்வு நிகழ்ச்சி 
மாவட்டத்தில் வாக்காளர் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வாக்களித்திட மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
 இந்த அடிப்படையில் வி.வி.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு ஒரு வரைபட நிகழ்ச்சியின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
சைக்கிள் பேரணி 
அதனைத்தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் கல்லூரி வளாகத்தில் தேசிய மாணவர் படை பேரணி, கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மெதுவாக செல்லும் இருசக்கர வாகன பேரணி மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
 தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வரைபடம் மற்றும் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் மாணவிகள் ரங்கோலி கோலம் ஆகியவற்றை கலெக்டர் கண்ணன் பார்வையிட்டு பாராட்டினார்.
உறுதிமொழி 
இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவிகள் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில்அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் கல்லூரி மாணவிகள் கலெக்டருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.
 இதனைதொடர்ந்து ஏ.ஏ.ஏ.என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள் கலெக்டர் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் ஜெயக்குமார், பயிற்சி துணை கலெக்டர் ஷாலினி, தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தானலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்