வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கரூர்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தினசரி பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஆட்டோக்கள், பஸ்கள், சரக்கு வாகனங்களில் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான தகவல்கள் அடங்கிய ஸ்டிக்கரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மகளிர் திட்ட இணை இயக்குனர் வாணிஈஸ்வரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.