வெள்ளியணை அருகே தூக்குப்போட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை
வெள்ளியணை அருகே தூக்குப்போட்டு சத்துணவு அமைப்பாளர் தற்கொலை செய்து கொண்டார்.
வெள்ளியணை
சத்துணவு அமைப்பாளர்
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 59). இவர் வடக்கு மேட்டுப்பட்டியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது ஒரே மகளான செல்விக்கு திருமணமாகி கணவர் வீடான கரூரில் வசித்து வருகிறார். இதனால் பழனியம்மாள் மட்டும் வெங்கடாபுரத்தில் தனியாக வசித்து வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மகள் செல்வியை செல்போன் மூலம் அழைத்த பழனியம்மாள், தனக்கு அதிகமாக நெஞ்சு வலி இருப்பதாகவும் உடனே கிளம்பி வருமாறும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மகள் செல்வி வெங்கடாபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது, பழனியம்மாள் வீட்டு தாழ்வாரத்தில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வி கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வெள்ளியணை போலீசார் வந்தனர். பின்னர், இறந்த பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.