கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2021-03-12 16:57 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் பாஸ்கர சேதுபதி (வயது19). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதை தொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி மேற்கண்ட பாஸ்கர சேதுபதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்