ஸ்ரீவைகுண்டம் அருகே மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம்

ஸ்ரீவைகுண்டம் அருகே மின்னல் தாக்கி கோவில் கோபுரம் சேதம் அடைந்தது.

Update: 2021-03-12 15:26 GMT
ஶ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி பத்திரகாளியம்மன் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் கோபுர உச்சியில் இருந்த ஒரு கலசம் சேதம் அடைந்தது. கோபுரத்தை சுற்றிலும் இருந்த சிமெண்டிலான சிலைகள் சேதமடைந்து கீழே விழுந்தன. இந்த நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு கோவிலின் உள்ளே இருந்த 10-க்கும் மேற்பட்ட இளம்பெண்களும், குழந்தைகளும் இடி, மின்னல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். சேதமடைந்து கீழே விழுந்து கிடந்த சிலைகளை அப்பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்