காரில் சென்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
பறக்கும் படை சோதனை: காரில் சென்ற பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்
தேனி:
தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூரில் இருந்து கொடுவிலார்பட்டி செல்லும் சாலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கான பறக்கும் படை அதிகாரி செல்லக்கிருஷ்ணன் தலைமையில் பறக்கும் படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. இதில் காரில் வந்த பூதிப்புரத்தை சேர்ந்த வைரமணி மனைவி உமாசங்கரியிடம் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 700 இருந்தது.
ஆனால், அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.