திருச்செந்தூரில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
திருச்செந்தூரில் தேர்தல் பார்வையாளர் ஆலோசனை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராகேஷ் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் நேற்று திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், தாசில்தார்கள் திருச்செந்தூர் முருகேசன், ஏரல் இசக்கிராஜ், துணை தாசில்தார்கள் ராகவன், பாலசுந்தர் மற்றும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு, செலவின கணக்கு குழு போன்றவற்றில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வேட்பாளர்களின் வரவு செலவு கணக்குகளை கண்காணிப்பது குறித்து அவரவர் பணிகளை முறையாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 94899 47508 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.