கே.வி.குப்பம் அருகே மர்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் சாவு

கே.வி.குப்பம் அருகே மர்ம விலங்குகள் கடித்து 4 ஆடுகள் இறந்தது.

Update: 2021-03-12 13:47 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கே.வி.குப்பம் அடுத்த வேப்பங்கனேரி பகுதியை சேர்ந்தவர் சொக்கம்மாள். ஆடுகள் வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே உள்ள பட்டியில் நேற்று முன்தினம் இரவு 10 ஆடுகளை அடைத்திருந்தார். நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு சொக்கம்மாள் சென்று பார்த்துள்ளார். அப்போது இரண்டு ஆடுகள், 2 குட்டிகள் மர்ம விலங்குகள் கடித்ததில் குடல் சரிந்து இறந்த நிலையில் கிடந்தன. 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நேற்று காலையில் ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குறித்து குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபு உத்தரவின்பேரில் குடியாத்தம் வனவர் முருகன் உள்ளிட்ட வனத்துறையினர் வேப்பங்கனேரி கிராமத்திற்குச் சென்று மர்ம விலங்குகளால் கடிபட்டு இறந்த ஆடுகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கால்நடை மருத்துவரைக் கொண்டு ஆடுகளை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆடுகளை கடித்த மர்ம விலங்குகள் குறித்து அப்பகுதியில் உள்ள விலங்குகளின் கால்தடங்கள் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்