நாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறை மீறல்: வாகன உரிமையாளர்களிடம் ரூ.3 லட்சம் அபராதம் வசூல்
நாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறை மீறல்: வாகன உரிமையாளர்களிடம் ரூ.3 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டு பகுதியில் 1,804 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 328 வாகனங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறி இயக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில் சாலை வரி கட்டாமல் இயக்கிய வாகனங்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்கள் கண்டறியப்பட்டு ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்பட்டது. மேலும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.