பெரம்பலூரில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
பெரம்பலூரில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 7 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 380 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 248 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.