பெற்றோர்களின் மாத்திரைகளை தின்ற சிறுவன் பரிதாப சாவு
பாடாலூரில் பெற்றோர்களின் மாத்திரைகளை தின்ற சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
பாடாலூர்:
மருந்து, மாத்திரைகளை தின்றான்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நம்புகுறிச்சியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 28). இவர் தற்போது பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள பாடாலூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிவாஸ்(வயது 5).
இவன் நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகே இருந்த பெற்றோர்களுக்கான மருந்து, மாத்திரைகளை நிவாஸ் தின்றதாக தெரிகிறது. இதையறிந்த உறவினர்கள், அவனை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சாவு
அங்கிருந்து அச்சிறுவனை மேல்சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நிவாஸ் பரிதாபமாக இறந்தான். இதுபற்றி பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.