கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
வேலூர்
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் எப்படி எங்களை தடுக்கலாம் எனக்கூறி ஊழியர்களை தாக்க முயற்சி செய்ததாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விடுதியின் உரிமையாளர் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து தோட்டப்பாளையத்தை சேர்ந்த விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி தோட்டப்பாளையத்தை சேர்ந்த சிலர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.
அவர்கள் போலீசாரிடம் இருவரையும் விடுவிக்க கோரிக்கை வைத்தனர். அப்போது போலீசார் புகாரின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளோம் என்றனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.