தூத்துக்குடி கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாமியை வழிபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்களில் சிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாமியை வழிபட்டனர்.
சிவராத்திரி விழா
தூத்துக்குடி மாவட்டத்தில் மகாசிவராத்திரி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் பக்தர்கள் விரதம் இருந்து இரவில் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 216 சிவலிங்கபூஜை, 108 விளக்கு பூஜைகள் நடந்தன.
தொடர்ந்து இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடந்தன. 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்தன. விடிய விடிய கோவில் திறந்து இருந்தது. பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமியை வழிபட்டு சென்றனர்.
திரளான பக்தர்கள்
இதேபோல் மாவட்டம் முழுவதும் 243 கோவில்களில் சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.