சாராயம் விற்ற 2 பேர் கைது

சாராயம் விற்ற 2 பேர் கைது

Update: 2021-03-11 16:34 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி தலைமையிலான போலீசார் விரியூர் கிராம பகுதிகளில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விரியூர் கிராமம், அத்தியூர் செல்லும் சாலையில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமத்தை  சேர்ந்த அந்தோணி ஜோசப் தனராஜ் (வயது 31), ஆரோக்கியதாஸ்(35) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் 400 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்