குடிமங்கலத்தில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு

Update: 2021-03-11 16:00 GMT
குடிமங்கலம்
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்)  6-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குடி மங்கலத்தில்  துணை  போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தலைமையில் மத்திய பாதுகாப்புபடை, எல்லைப்பாதுகாப்பு படைமற்றும் போலீசார் கலந்து கொண்ட கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கொடி அணி வகுப்பில் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்