ராணிப்பேட்டையில் சிக்கன் கடைக்காரரிடமிருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்
ராணிப்பேட்டையில் சிக்கன் கடைக்காரரிடமிருந்து ரூ.7 லட்சம் பறிமுதல்
சிப்காட்
ராணிப்பேட்டையை சேர்ந்தவர் ரபீக் அகமது. ராணிப்பேட்டையில் சிக்கன் கடை நடத்திவருகிறார். இவர் நேற்று முன்தினம் பனப்பாக்கத்திலிருந்து ராணிப்பேட்டைக்கு காரில் வந்துள்ளார். அப்போது ராணிப்பேட்டை பாலாறு அருகே தேர்தல் தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரி பிரகாஷ் தலைமையிலான குழுவினர், ரபீக் அகமதுவின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது ரபீக் அகமதுவிடம் ரூ.7 லட்சத்து 1,320 இருந்தது. அதற்கு உரிய ஆவணம் அவரிடம் இல்லை. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து பணத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வாலாஜா தாசில்தார் ஜெயப்பிரகாஷிடம் ஒப்படைத்தனர்.