சேலம் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்தனர்.

Update: 2021-03-11 07:35 GMT
கன்னங்குறிச்சி,

சேலம் கோரிமேடு பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த அசாருதீன் (வயது 30) என்பவர் வழிமறித்து கைக்கெடிகாரம் மற்றும் ரூ.200 ஆகியவற்றை பறித்து கொண்டு ஓடிவிட்டார். இதுகுறித்து சீனிவாசன் கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அசாருதீனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்