அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

பூசாரிபாளையம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அன்னூர் ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-03-11 03:17 GMT
அன்னூர்,

கோவை அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அன்னூர் மேட்டு பாளையம் ஊராட்சி பூசாரிபாளையம் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. 

இதேபோன்று ஆழ் குழாயில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நிலையில்  பூசாரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் புகார் அளிக்க சென்றனர்.

அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லாததால் மேலாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்