ஈரோடு மாவட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்; கலெக்டா் சி.கதிரவன் அறிவிப்பு
8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்கள்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளா்களை இந்திய தோ்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது. அதன்படி பொதுப்பார்வையாளா்களாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு விஷால் ககன், ஈரோடு மேற்கு தொகுதிக்கு அடோனு சட்டா்ஜி, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு யோகேஷ்குமார், பவானி மற்றும் அந்தியூர் தொகுதிகளுக்கு மனோஜ்குமார், கோபி மற்றும் பவானிசாகர் தொகுதிகளுக்கு நா்பு வாங்டி புடியா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேர்தல் செலவின பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டா்ஜி, மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ்குமார்தேவ், அந்தியூர் மற்றும் கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால்ஜட், பவானி மற்றும் பவானிசாகர் தொகுதிகளுக்கு பவானி சங்கர்மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் காவல்துறை பார்வையாளராக 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுனில்குமார் நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். செலவின பார்வையாளர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். இவர்களை தொடர்ந்து ஏனைய தேர்தல் பார்வையாளர்களும் வருகை புரிந்து தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளனர்.