பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-03-10 21:56 GMT
பவானிசாகர்
பவானிசாகர் பகுதியில் சம்பங்கி பூ விலை உயந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சம்பங்கி பூ
பவானிசாகர் மற்றும் சுற்றுப்புற பகுதியான தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தப்பள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பங்கி பூ சாகுபடி செய்துள்ளனர். தினமும் இந்தப்பகுதியில் சுமார் 2 டன் சம்பங்கி விளைகிறது.
இங்கு விளையும் பூக்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். நாள்தோறும் பூக்களின் தேவைக்கேற்ப விலை மாறுபடுகிறது.
விலை உயா்வு
இந்தநிலையில் பவானிசாகர் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு கிலோ சம்பங்கி ரூ.175-க்கு விற்பனையானது. நேற்று கிலோவிற்கு ரூ.50 அதிகரித்து ஒரு கிலோ சம்பங்கி ரூ.225-க்கு விற்றது. பூக்களின் விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்