தேசிய குத்துச்சண்டை போட்டி: தங்கம் வென்ற திருச்சி மாணவருக்கு பாராட்டு
தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற திருச்சி மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
திருச்சி,
3-வது தேசிய பெடரேசன் கோப்பை குத்தச் சண்டை போட்டி கோவாவில் நடந்தது. இதில் திருச்சியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் மித்துல் உள்பட13 பேர் கலந்து கொண்டனர். 17-வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட மித்துல் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி தங்கப்பதக்கம் வென்றார்.
இந்தபோட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நேபாளத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெறும் தெற்காசிய குத்துச் சண்டையில் கலந்து கொள்ள அவர் தகுதி பெற்றார். இந்நிலையில் மாணவர் மித்துல்லுக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது.
விழாவின்போது, வறுமையில் வாடி வரும் மித்துல்லுக்கு தெற்காசிய போட்டியில் பங்கேற்க வசதியாக ரோட்டரிகிளப் ஆப் பீனிக்ஸ் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது.