சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன போராட்டம்

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கழுத்தில் தூக்குகயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2021-03-10 21:13 GMT
அண்ணாமலைநகர், 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி மாணவர்கள் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து மாலை நேரத்தில் அறவழியில் போராட்டம் நடத்தி  வருகிறார்கள். 

அந்த வகையில் 13-வது நாளாக நேற்று மாலை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தில் தூக்கு கயிறுகளை மாட்டி கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி மருத்துவ மாணவர்கள் நடத்திய நூதன போராட்டத்தால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

மேலும் செய்திகள்