ஜேடர்பாளையம் அருகே பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா
ஜேடர்பாளையம் அருகே பகவதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
பரமத்திவேலூர்,
ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையத்தில் பகவதியம்மன் கோவில் திருவிழா கடந்த 5-ந்் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடந்தது. திங்கட்கிழமை வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தீமிதி விழா நடந்தது. இதில் கு.அய்யம்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜையும், இரவு வாணவேடிக்கையும் நடந்தது. நேற்று காலை கிடா வெட்டுதலும், மாலை மஞ்சள் நீராடலும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.