முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா
அம்பை அருகே உள்ள வாகைபதியில் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
அம்பை:
அம்பை அருகே உள்ள வாகைபதியில் முத்துமாலை அம்மன் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் முன்நின்று முறை நடத்தும் கோவில் கொடை விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு மன்னார்கோவிலில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீப மங்கள ஜோதி ஊர்வலம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வாகைபதி வந்தடைந்தது. தொடர்ந்து கொதிக்கும் நீரில் பூக்களை அடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடிமக்களும் செய்திருந்தனர்.