பிரதோஷ வழிபாடு

எஸ்.புதூர் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-03-10 19:13 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு சிறப்பு 16 வகையான அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதேபோல் உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து உலகநாயகி சமேத உலகநாத சாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்