முகக்கவசம் அணியாத 40 வியாபாரிகள் மீது வழக்கு

முகக்கவசம் அணியாத 40 வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-10 19:12 GMT
நெல்லை:

தமிழகத்தில் சில இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் முகக்கவசம் அணிவதை மீண்டும் கட்டாயம் ஆக்குவதற்கும், சமூகவிலகலை கடைப்பிடிக்க பொதுமக்களுக்கு, சுகாதார அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் ஆகியோர் அறிவுறுத்தி வருகிறார்கள். 

நெல்லை மாநகர போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது முகக்கவசம் அணியாமல் பொருட்கள் விற்பனை செய்த வியாபாரிகள், ஊழியர்கள் மற்றும் சமூகவிலகலை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசலுடன் காணப்பட்ட வியாபார நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் நடந்த சோதனையில் 40 வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனைகளை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்