அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-03-10 18:17 GMT
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.டி. மலையில் புதிதாக அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் புனிதநீரை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் யாகசாலையில் வைத்து முதல் காலபூஜை, இரண்டாம் கால பூஜை உள்பட பல்வேறு பூைஜகள் நடந்து. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்