கொண்டலாம்பட்டி:
கொண்டலாம்பட்டி அருகே உள்ள சின்னபுத்தூர் பகுதியில் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த நல்லம்மாள் (வயது 50) என்பவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.