தலைவாசல் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்பு
தலைவாசல் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் மீட்கப்பட்டனர்.
தலைவாசல்,
தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஊராட்சி ராமானுஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் நேற்று காலை 8 மணிக்கு புள்ளி மான் ஒன்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த கலியமூர்த்தி மணிவிழுந்தான் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமாரி நடேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஆத்தூர் வனத்துறை அதிகாரிக்கும், தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கும் உடனே தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ஆத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று கிணற்றில் தத்தளித்த புள்ளிமானை உயிருடன் மீட்டனர். பின்னர் அதனை வனத்துறை முட்டல் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.