நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரவழைப்பு

நீலகிரி மாவட்டத்துக்கு கூடுதலாக 10 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-03-10 06:17 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. தற்போது மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள கேரளா மாநிலத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  

நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் உள்பட தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. 

தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட உள்ளது. 

இதற்காக சமீபத்தில் 17 ஆயிரம் கொரோனா தடுப்பு மருந்து கொண்டு வரப்பட்டது. தற்போது கூடுதலாக 10 ஆயிரம் தடுப்பு மருந்து சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டு, ஊட்டியில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்