கதவு விழுந்து காவலாளி சாவு

சம்பந்தமூர்த்தி தெருவில் உள்ள வாகன பாதுகாப்பு மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

Update: 2021-03-10 03:27 GMT
மதுரை,

மதுரை செல்லூர் மீனாம்பிகைபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 65). இவர் சம்பந்தமூர்த்தி தெருவில் உள்ள வாகன பாதுகாப்பு மையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வேலையில் இருந்த போது அங்கிருந்த இரும்பு கதவு அவர் மீது விழுந்தது. இதில் தலையில் அடிபட்டு அங்கேயே மயங்கி விட்டார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது ராஜூ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்