தலைமை அஞ்சலகத்தில் ஆதார் திருத்தம் சேவை
தலைமை அஞ்சலகத்தில் ஆதார் திருத்தம் சேவை
மதுரை,மார்ச்.
முதுநிலை அஞ்சல் அதிகாரி கலைவாணி கூறியதாவது:- பொதுமக்கள் தங்களின் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் குறித்த சேவைகள் மேற்கொள்ள வடக்குவெளி வீதியில் சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள மதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பிரிவு இன்று (புதன்கிழமை) தொடங்கி அனைத்து வேலை நாட்களிலும் காலை 8.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். எனவே புதிய ஆதார் பதிவு மற்றும் ஆதார் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்பும் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்" என்றார்.