தென்னிந்திய அளவிலான சிலம்பாட்டம், கராத்தே போட்டி: லால்குடி மாணவ-மாணவிகள் சாதனை
தென்னிந்திய அளவிலான சிலம்பாட்டம், கராத்தே போட்டியில் லால்குடி மாணவ-மாணவிகள் சாதனை படைத்தனர்.
லால்குடி,
தமிழர்களின் தற்காப்பு கலை மற்றும் தமிழர்களின் விளையாட்டு என அழைக்கப்படும் சிலம்பத்தை லால்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட இளைஞர்கள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தென்னிந்திய அளவில் சிலம்பம், கராத்தே போட்டி நடந்தது. இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் லால்குடி பகுதியை சேர்ந்த 58 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 8 வயதிலிருந்து 60 வயது வரை நடந்த போட்டியில் சிலம்பாட்டத்தில் 33 பேர் பங்கேற்று 29 பேர் வெற்றி பெற்றனர். கராத்தே போட்டியில் 25 பேர் பங்கேற்று 19 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 48 வீரர்களுக்கு கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை சிலம்பாட்ட ஆசிரியர் கணநாதன் பாராட்டி கவுரவித்தார்.