கோவையில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவையில் நேற்று 55 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கோவை
கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நேற்று பாதிப்பு 55 ஆக அதிகரித்தது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 56 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 56 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினார்கள். தற்போது 352 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.