கூடங்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

கூடங்குளம் அருகே புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-03-09 20:06 GMT
கூடங்குளம்:

கூடங்குளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் ஆவரைகுளம் சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். 

இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூடங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று கண்ணனின் கடையில் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கண்ணனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்