பாளையங்கோட்டையில் கைதி திடீர் சாவு
பாளையங்கோட்டை ஜெயிலில் கைதி திடீரென இறந்தார்.
நெல்லை, மார்ச்:
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள பூதப்பாண்டி மேல தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 73). இவர் ஒரு வழக்கில் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் கடந்த மாதம் 11-ந் தேதி அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று உடல்நிலை கோளாறு ஏற்பட்டது. அவரை சிறை காவலர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.