திருப்பூர் அருகே குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருப்பூர் அருகே குப்பை தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
திருப்பூர்:-
திருப்பூர் அருகே உள்ள நல்லூர் போலீஸ் நிலையம் எதிரே உள்ள அமர்ஜோதி முல்லைநகரில் பனியன் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனம் அருகே பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலரும் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். இதற்கிடையே நேற்று காலை அந்த குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அருகில் மின்மாற்றி இருந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சண்முகம் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.