எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி?

எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி?

Update: 2021-03-03 20:14 GMT
சாத்தூர்,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன் ஏற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் சாத்தூர் பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பொதுமக்கள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து மாதிரி வாக்குப்பதிவு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வாக்களிப்பது குறித்து விளக்கம் பெற்று சென்றனர். அப்போது உதவி தேர்தல் அலுவலர் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்