போலீஸ் எழுத்துதேர்வில் தோல்வி: விஷம் தின்று பெண் தற்கொலை
போலீஸ் எழுத்துதேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் எழுத்துதேர்வில் தோல்வி:
விஷம் தின்று பெண் தற்கொலை
திருச்சி, மார்ச்.4-
திருச்சி ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது26). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் போலீஸ் எழுத்து தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனையில் காணப்பட்ட அவர் கடந்த மாதம் 20-ந்தேதி வீட்டில் எலி மருந்து(விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.