இரும்பு தகடு திருடிய 2 பேர் பிடிபட்டனர்

இரும்பு தகடு திருடிய 2 பேர் பிடிபட்டனர்

Update: 2021-03-03 20:08 GMT
மதுரை, 
மதுரை செல்லூர் மெயின் ரோடு அரசு மகளிர் கல்லூரி அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு உள்ள வயர்கள், இரும்பு தகடுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு வந்தன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கு கண்காணிப்பு கேமரா வைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் 2 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்த இரும்பு தகடுகளை திருடி கொண்டிருந்தனர். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து செல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். அதில் கோரிப்பாளையத்தை சேர்ந்த அழகர் (வயது 60). பந்தல்குடியை சேர்ந்த மாயக்கண்ணன் (42) என்பதும், அவர்கள் இரும்பு தகடுகளை திருடியது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்