விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்தில் பொது மக்களிடமிருந்தும் வாக்காளர்பட்டியலில் உள்ள வாக்காளர்களிடமிருந்தும் நேரிலும் மற்றும் இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் புகைப்பட மாற்றம் போன்றவற்றிற்கான படிவங்கள்பெறப்பட்டன. இதனை அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு செய்து தகுதியின் அடிப்படையில் மேற்கண்ட படிவங்கள் வாயிலாக புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி வெளியிடப்பட்டது. மேற்கண்டவாறு இறுதி வாக்காளர் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக வருகிற 13 மற்றும் 14-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. மேற்படி முகாமில் புதிய வாக்காளர்கள் வாக்காளர்அடையாளஅட்டையை பதிவிறக்கம் செய்வது மற்றும் அது தொடர்பான அறிவுரைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.