இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2021-03-03 19:51 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில், 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இரு சக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் ரத்னா கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வருகிற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பது உள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம் காமராஜர் திடலில் முடிவடைந்தது. முன்னதாக கலெக்டர், இரு சக்கர வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டினார்.

மேலும் செய்திகள்