மூதாட்டியிடம் 2 பவுன் தங்கசங்கிலி பறிப்பு

மூதாட்டியிடம் 2 பவுன் தங்கசங்கிலி பறிக்கப்பட்டது.

Update: 2021-03-03 19:16 GMT
குளித்தலை
குளித்தலை காவிரி நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தனக்கொடி (வயது 80). இவர் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் தனக்கொடி கழுத்தில அணிந்திருந்த தங்கசங்கிலியை திருட முயற்சித்துள்ளார். அதை உணர்ந்த மூதாட்டி உடனடியாக சுதாரித்துக் கொண்டு தனது சங்கிலியை இறுக்க பிடித்துக் கொண்டுள்ளார். இருப்பினும் அந்த தங்கசங்கிலியில் சுமார் 2 பவுன் உடைய பகுதியை மட்டும் அந்த மர்ம நபர் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் குறித்து பாண்டியன் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்னறனர். பட்டப்பகலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்