குளித்தலை அருகே தீக்காயம் அடைந்த ஆசிரியை சாவு

குளித்தலை அருகே தீக்காயம் அடைந்த ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-03-03 19:16 GMT
குளித்தலை
ஆசிரியை தீக்காயம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. அதே பகுதியில் அரிசி கடை வைத்துள்ளார். அவரது மனைவி லதாமகேஷ் (வயது 32). இவர் பாப்பயாம்பாடியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு நெஞ்சு வலி இருந்து வந்ததாகவும், அதற்காக அவர் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லதாமகேஷ் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
சிகிச்சை பலனின்றி  சாவு
இதனால் வலி தாங்க முடியாமல் அங்குமிங்கும் ஓடி சத்தம் போட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்துள்ளனர். பின்னர் பலத்த தீக்காயமடைந்த லதாமகேசை ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு லதாமகேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்